கர்ப்பிணிகளுக்கு குமட்டல் டானிக்

நம்ம கடை

Shop Here for Green Gifts

கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், வாந்தி, தலைசுற்றலுக்கு ஒரு சிறந்த டானிக். பொதுவாக முதல் மூன்று மாதம் இந்த தொந்தரவை பெரும்பாலான பெண்கள் எதிர் கொள்வதுண்டு. சிலருக்கு ஒன்பது மாதமும் இருக்கும். அதற்கு ஒரு சிறந்த எளிய தீர்வு…

அதிக தலை சு‌ற்ற‌ல், மயக்கம், குமட்டல், வாந்தி இருக்கும் கர்ப்பிணிகள் அதனைத் தவிர்க்க இன்று பல மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இவற்றால் குழந்தைக்கும் பதிப்பு உண்டாகிறது. இதனை எளிதாக வீட்டில் உள்ள சீரகத்தை வைத்து தவிர்க்கலாம். 

டானிக் தயாரிக்க:

சீரகம் 1 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனை நன்கு உரலில் பொடித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பொடித்த சீரகத்தை வெது வெதுப்பாக நீருடன் அருந்தலாம். அதனுடன் தேன் கலந்தும் பருகலாம்.  

காலை நேரங்களில் ஒரு கப் அளவிற்கு இதனை பருக நல்ல பலன் கிடைக்கும்.