நவநாகரீக பழக்க வழக்கம், நவீன உணவுகள், பரம்பரை என பல காரணங்களால் இன்று இளம் பருவத்தினர் முதல் முப்பது வயதுள்ளவர்களுக்கும் இன்று செம்பட்டை முடி ஏற்படுகிறது.
செம்பட்டை முடி ஏற்பட காரணம்
- இரசாயனங்கள் கொண்ட ஷாம்பு, செயற்கை சோப்பு என பலவற்றை தலைக்கு தேய்ப்பதும் எண்ணெய் தேய்க்காமல் இருப்பதும் முடி செம்பட்டையாவதற்கு மிக முக்கிய காரணம்.
- சத்துக் குறைபாடு, நச்சுக்கள் அதிகம் கொண்ட பதப்படுத்தப்பட்ட
- போதுமான புரத சத்துகள் உடலில் இல்லாமல் போவதும்.
- அதிகமாக பித்தம் ஏற்படுத்தும் உணவுகளை உட்கொள்ளுதல்.

செம்பட்டை முடி கருமையாக
- மருதாணி இலையுடன் நில ஆவாரை இலையையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தலையில் தேய்த்து சில மணி நேரம் ஊறவைத்து குளிக்க விரைவில் மறையும். ஆரம்பத்தில் மாதம் இரண்டு முறையும் பின் படிப்படியாக குறைத்து மாதம் ஒருமுறை என குளித்துவர நல்ல பலன் கிடைக்கும்.
- செம்பருத்தி தைலம் அன்றாடம் தலைக்கு தேய்த்து குளிக்க செம்பட்டை மாறும். வீட்டிலேயே செம்பருத்தி பூக்களை காயவைத்து தூளாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்ச செம்பருத்தி தைலம் தயார்.
- சம அளவு கற்றாழை சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி இளம்சூடாக தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளிக்க நல்ல பலன் கிடைக்கும்.
- கடுக்காய் எண்ணெய் அன்றாடம் தேய்க்கவும் செம்பட்டை மாறும். கடுக்காய் தூளை தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச கடுக்காய் எண்ணெய் தயார்.
- சீரகத்தை வறுத்து தூளாக்கி பசும் பால் விட்டு காய்ச்சி இளம்சூட்டில் தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளிக்கவும் நல்ல பலன் கிடைக்கும்.
- வாதநாராயண இலையை மைய அரைத்து தலைக்கு தேய்க்க நல்ல பலனைப் பெறலாம்.
- மேலும் நெல்லிக்காய் தைலம், மருதாணி தைலம், கருவேப்பிலை தைலம் ஆகியவற்றையும் அன்றாடம் தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவர செம்பட்டை மறையும்.