கிழங்குகளின் மருத்துவ குணங்கள்

கருணைக் கிழங்கு

மனிதர்களுக்கு கருணையை அள்ளிக்கொடுக்கும் கிழங்கு இந்த கருணைக் கிழங்கு. பிடி கருணை, கருணை என பல பெயர்கள் இதற்கு உண்டு. இக்கிழங்கு அஜீரணத்தை அகற்றி நல்ல பசியை உண்டாக்கும் மற்றும் வாதசூலை, குன்மநோய், கிருமிகள், வாதம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களைப் போக்கும்.

முள்ளங்கிக் கிழங்கு

இருமல், ஜலதோஷம், தலைவலி, கபம், சுவாசக் கோளாறு, குன்மம், பல்நோய், மூலக் கடுப்பு போன்ற குறைபாடுகளை அகற்றும்.

தாமரைக் கிழங்கு

தாமரைக் கிழங்கு கண்களில் தோன்றும் குறைபாடுகளைப்
நீக்க பயன்படுகிறது. தவளைச்சொறி, உடல் வலி, பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் போன்றவற்றையும் தீர்க்கவல்லது.

பனங்கிழங்கு

பித்த மேகம், அஸ்திசூடு ஆகியவற்றை நன்கு போக்கும். உடல் குளிர்ச்சி உண்டாக்கும்.

சின்னக் கிழங்கு

இருதயநோய், ஆஸ்துமா போன்ற பிணிகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

வெற்றிலை வள்ளிக்கிழங்கு

வெற்றிலை வள்ளிக்கிழங்கு நல்ல ஊட்டச்சத்தை உடலுக்கு தரக் கூடியது. பாண்டு ரோகம் குணமாகும். சிலருக்கு இக்கிழங்கு வாய்வுக் கோளாறுகளை மிகுதியாகக் கூடும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சத்துக் குறைவான உணவை உண்பதால் ஏற்படும் சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது சர்க்கரை வள்ளிக் கிழங்கு. இந்த கிழங்கு பொதுவாக தை மாதத்தில் அதிகம் கிடைக்கும். இதனை அதிகமாக உட்கொண்டால் சிலருக்கு வாதத் தொல்லைகளை ஏற்படுத்தும்.

அமுக்கிரா கிழங்கு

கட்டிகளின் காரணமாக உடலில் ஏற்படும் வீக்கங்களைக்
கரைத்துக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதைப்பாலில் நன்கு வேக வைத்து உலர்த்தி பின் இடித்து அத்துடன் கற்கண்டு சேர்த்துப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் தாதுபுஷ்டி ஏற்படும்.

(1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *