வரகு அரிசி கஞ்சி

வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கல்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீர் சீராக சுரக்க உதவுகிறது. 

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று. சாதாரண சாதம் முதல் பொங்கல், இட்லி, கஞ்சி, பிரியாணி, முறுக்கு, தட்டை என வித விதமான பலகாரங்களை இந்த வரகரிசியில் தயாரிக்கலாம்.

This image has an empty alt attribute; its file name is varagu-rice-in-tamil-kodo-.jpg

சத்துக்கள் நிறைந்த சுவையான கஞ்சி. உடலுக்கு தெம்பை அளிக்கும் சிறந்த தானியம் வரகு. இதனில் காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்து காலையில் பருக உடல் பலப்படும். பசியின்மை, வயிற்று புண், அஜீரணம் ஆகியவற்றிற்கு சிறந்தது. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்றது. காய்ச்சல், இருமல், சளி சமயங்களிலும் பருக சிறந்தது.

மேலும் வரகரிசியின் பயன்கள், சத்துகள் மற்றும் நன்மைகளை தெரிந்து கொள்ள – வரகு அரிசி / Kodo Millet in Tamil.

தேவையான பொருட்கள்

  • ¼ கப் வரகு அரிசி
  • ¼ கப் கேரட்
  • ¼ கப் பட்டாணி
  • சிறிது கொத்தமல்லி
  • ½ ஸ்பூன் கடுகு

  • 4 பச்சை மிளகாய்
  • 2 வெங்காயம்
  • 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
  • வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • கேரட், பட்டாணி சேர்க்கவும்.

  • சிறிது வதக்கிய பின் பின் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
  • பின் வரகரிசியை சேர்த்து பின் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  • பதினைந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • வரகரிசி நன்கு வெந்த பின் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
(1 vote)