Nails and Deficiency, vitamin deficiency nail Vitamin Deficiency Symptoms nails show

நகங்களை பராமரிப்பது

  • நக‌‌ச்சொ‌த்தைக்கு வெந்நீரில் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நகங்களை நன்றாகக் கழுவ வேண்டும்.
  • தினமும் இளஞ்சூடான நீரில் எலும்பிச்சை பிழிந்து 10 நிமிடம் கை விரல்களை வைத்திருக்கவும். இதனுடன் துளசி, புதினா சேர்ப்பது நல்ல புத்துணர்ச்சி கொடுக்கும். 

  • செக்கு நல்லஎண்ணெய் கொண்டு அழுத்தம் (மசாஜ்) கொடுப்பது சிறந்தது. 
  • நார்ச் சத்துள்ள குறுந் தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 
  • முருங்கக்கீரை, பப்பாளி, மாம்பழம், பேரிச்சம்பழம் போன்ற உணவு வகைகள் நகத்தை பாதுகாக்க உதவும். 
  • மன அழுத்தம், கவலை இல்லாது இருப்பது மிக முக்கியம். யோகா, தியானம், சிரிப்புப் பயிற்சி செய்வது நல்லது.

  • சுத்தமான மண் பானைத் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான உடல் மற்றும் நக வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உடல் ஆரோக்கியத்தின் வெளிப்பாடே நகங்கள். 
  • இரசாயன சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். இயற்கை மூலிகை பொடிகளை பயன்படுத்தலாம். நகப்பூச்சை தவிர்த்து மருதாணி பயன்படுத்தவும். கை விரல் நகப்பூச்சின் இரசாயனம் உணவோடு வயிற்றில் சேர்த்தல் பல உபாதைகளை ஏற்படுத்தும். 

  • நல்ல முடி வளர்ச்சிக்கு விரல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மேலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது. 
  • விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துப் பராமரிப்பது உடல் நலத்துக்கு நல்லது.
Nails and Deficiency, vitamin deficiency nail Vitamin Deficiency Symptoms nails show