அமிர்த கரைசல்

இயற்கை செடி வளர்ச்சி ஊக்கி

நல்ல மகசூல் பெற ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி மற்றும் மண் வளம் மிகவும் அவசியம். அதற்கு சிறந்த நிலவள ஊக்கியாக உள்ளது இந்த அமிர்த கரைசல். எளிமையாகவும் விரைவாகவும் தயாரிக்ககூடிய சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும் உள்ளது.

மிகவும் எளிமையாக தயாரிக்கக்கூடிய இந்த அமிர்த கரைசலை இயற்கை விவசாயம் செய்பவர்கள், மாடித் தோட்டம், வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களும் எளிமையாக தயாரித்து பயன்படுத்தலாம்.

அமிர்த கரைசலின் பயன்கள்

  • பயிர்களில் தெளிக்கும் போது அவை நன்கு செழிப்பாக வளரும் தன்மை பெறுகிறது.
  • மண் வளத்தை அதிகரிக்கிறது.
  • வறட்சி தாங்கும் தன்மை பெறுகின்றது.
  • கொடிவகை காய்கறிகளில் தெளிக்கப்படும் போது பெண் பூக்கள் எண்ணிக்கை பெருகி மகசூல் அதிகரிக்கும்.
  • அதிக மண்புழுக்கள் மண்ணின் மேல்பரப்பை நோக்கி வரவைக்கும்.
  • செடிகளின் வேர் வளர்ச்சி அதிகரிக்கும்.
  • பூ உதிர்தல் முற்றிலும் தடுக்கப்படும்.
  • பூச்சி தாக்குதலை கட்டுபடுத்தும்.

அமிர்த் கரைசல் தயாரிக்க தேவையானவை

பச்சை பசுஞ்சாணம் -10 கிலோ / பசு மாடு ஒருமுறை போட்ட சாணம்
பசுவின் மூத்திரம் -10 லிட்டர் / பசு மாடு ஒருமுறை பெய்த மூத்திரம்
நாட்டு சர்க்கரை -250 கிராம் / ஓரு கையளவு வெல்லம் / நாட்டு சர்க்கரை
தண்ணீர்

அமிர்த் கரைசல் தயாரிக்கும் முறை

  • பசுஞ்சாணம் மற்றும் கோமூத்திரம் இரண்டையும் ஒரு பிளாஸ்டிக் வாளியில் / சிமெண்ட் தொட்டியில் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
  • மாட்டுச்சாணம் புதிதாக இருக்க வேண்டும். கோ மூத்திரம் பழையதாக இருக்க வீரியம் அதிகமாக இருக்கும்.
  • பின் இவற்றை நன்கு கலந்துவிட வேண்டும்.
  • 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் மூடி வைக்க வேண்டும்.
  • 24 மணி நேரத்தில் தயாராகும் கரைசலே அமிர்த கரைசல் ஆகும்.

பயன்படுத்தும் முறை

  • ஒருமுறை தயாரித்த கரைசலை மூன்று நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம்.
  • வாரம் ஒரு முறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை செடிகளுக்கு தெளிக்கலாம்.
  • ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.
  • தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் மண்ணில் பெருகும்.
  • செடிகளில் / பயிரில் உள்ள நோய் / பூச்சி தாக்குதலை போக்கும்.

மேலும் எளிமையாக தயாரித்து பயன்படுத்தக்கூடிய பல இயற்கை உரம் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை தெரிந்துகொள்ள இங்கு இணையவும் – இயற்கை உரம், பூச்சி விரட்டி.

மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு

(2 votes)