food and disease, can food cure disease, can food cure auto immune disease, healthy foods, germs

உணவு எவ்வாறு நோயினை சரி செய்கிறது?

புதுப்புது பெயருடன் புரியாத மொழியில் வகைவகையான சோதனை முறைகளுடன் பல லட்சங்கள் கோடிகள் செலவு செய்தும் தீர்மானமாக இதுதான் இந்த நோய்க்கு மூலக் காரணம்.. இதனை இந்த முறையில் சரிசெய்து விடலாம் என்று கூறுபவரை இன்று விரல் விட்டு எண்ணி விடலாம்.

மருத்துவர்கள், வைத்தியர்கள், தெரபிஸ்டுகள் என அனைவரும் மருத்துவம் என்ற பெயரில் தங்களுக்கு தெரிந்த முறைகளில் சிகிச்சை கொடுத்தாலும் உணவே அனைத்திற்கும் பிரதானம். உணவை எவ்வாறு சீராக்குவது என்னும் கலையையும் உணவு குறித்த உடலின் முழு இரகசியத்தையும் தெரிந்துகொண்டால் நாமே நமக்கான உடல் தொந்தரவுகளை எளிமையாக போக்கிக் கொள்ளலாம்.

வெறும் வெண்பூசணி சாறு, எலுமிச்சை சாறு அருந்துவதும், இரண்டு தேங்காய் துண்டுகளையும் பழங்களையும் அன்றாடம் உண்ணுவதும், துயில் எழுதலும், காலை யோகாசனம், நஞ்சில்ல உணவுமே நீண்டநாள் நோயிலிருந்தும் விடுதலை பெற நமக்கு உதவும். மன உளைச்சலையும் இவை போக்குகிறது. 

food and disease, can food cure disease, can food cure auto immune disease, healthy foods

அது எப்படி சாத்தியம்?

லட்சங்களும் கோடிகளும் எங்கே!.. ஒரு ரூபாய் எலுமிச்சையும், இலவசமாக கிடைக்கும் சதுர் தேங்காயும் எவ்வாறு நோயை குணப்படுத்துவது…

புரியாத புதிராகவும், நம்ப முடியாததாகவும் இருகிறதே என்கிறீர்களா? காரணம் அறிவியல் கொடுத்த அறியாமை. 

ஒரு சின்ன உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். என்ன தான் பல லட்சங்கள் செலவு செய்தலும், கலர் கலராக மருந்து மாத்திரைகளை உட்கொண்டாலும் அவற்றுடன் மிகப் பிரதானமாக ஒவ்வொரு வேலையும் எடுத்துக் கொள்வது உணவு – உடல் இயங்க சக்தியைக் கொடுக்கக் கூடியது – ‘ஓய்வு, காற்று, நீர், உடல் இயக்கம், திட ஆகாரம்’ என்பதை மறந்து விடக் கூடாது.

இவையே உடல், உயிர் வளர மூலப் பொருளாகும். இவற்றுள் ஒன்று அதிகரித்து மற்றொன்று குறைந்தால் விளைவு ஆரோக்கியமின்மை. அதுவே காலப்போக்கில் உயிர்க்கொல்லி நோயாக உருமாறுகிறது.

உடல் ஆரோக்கியமாக இருக்க நம்மை சுற்றி பல சூட்சுமங்கள் சதாரணமாக அறிந்து கொள்ள இயலாத நிலையில் இந்த பிரபஞ்சத்தில் உள்ளது. அவற்றில் ஒன்றானது கழிவு நீக்க சூட்சுமம் (Detoxification).

அன்றாடம் அனைவராலும் மிக எளிய முறையில் பின்பற்றக்கூடிய ஒன்றாக உள்ளது மிதுவே. ஆரோக்கியத்தை காக்க கூடியதாக உள்ளது. கழிவு நீக்கம் பல பரிமாணங்களுடன் இருந்தாலும் எளிதாக அன்றாடம் பின்பற்றக்கூடியதை தவறாமல் கடைப்பிடித்தல் சுகமான வாழ்வைப் பெறலாம்.

பிரபஞ்ச நியதி அல்லது தத்துவங்களில் ஒன்றான ஒவ்வொரு செயலுக்கும் சமமான அல்லது எதிர்மறையான செயல் உள்ளது என்று அறிந்திருக்கிறோம். அவற்றுள் ஒன்றானதே உட்கொண்ட உணவின் கழிவை வெளியேற்றுதல். இந்த வெளியேற்றுதல் தடைப்பட்டால் உடல், உயிரின் நிலை திண்டாட்டமே. பல நோய்களுக்கு காரணமும் இந்த கழிவு வெளியேறுவதில் தவறுவதனாலேயே.

சக்தியைக் கொடுக்கக் கூடிய உணவுகள் இன்று செயற்கையாகவும், இரசாயனங்களாலும் போர்த்தப்பட்ட தாகவும் உள்ளது. இயற்கையான தூக்கம் கூட இல்லாத நிலையில் கிடைத்தவற்றை உண்டு அனைத்திலும் நஞ்சு என்ற நிலையில் உடல் கழிவு நமது செல்களிலும், செல் சுவர்களிலும் தங்குகிறது. இதனால் இரத்தமும் நஞ்சாக மாறி கழிவுகள் கொண்ட உடல் குப்பைத்தொட்டியை போல் வெப்பத்தை அதிகரிக்கிறது. 

food and disease, can food cure disease, can food cure auto immune disease, healthy foods, germs

செயற்கையான நஞ்சு கலந்த உணவு உடல் சூட்டை அதிகரிப்பதனால் கழிவுகள் சீராக வெளியேறாது கெட்டிப்பட்டுப் போக வெளியேற சிரமப்பட்டு உடலிலேயே சிறிதுசிறிதாக தங்கி விடுகிறது.

உதாரணதிற்கு சளி கெட்டிப்பட்டு உரைத்து போக சுவாசம் சம்பந்தமான நோய்கள் உருவாவதும்; தலை, பித்தப்பை, கர்ப்பப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் கற்கள் கட்டிகள் உருவாவதும்; கணையம் வெப்பத்தால் காய்ந்து இன்சுலின் சுரப்பை தடை செய்வதும்; செயற்கை மற்றும் AC காற்றினால் வியர்வை துவாரம் அடைப்பு ஏற்பட்டு தோல் தடிமானம் அடைவதும், தோல் நோய்கள் உருவாவதும்; பெருங்குடலில் மலம் கெட்டிப்பட்டு மலச்சிக்கல், மூலம் போன்ற தொந்தரவுகள் உருவாகிறது.

உடல் கழிவுகள் உடலில் தேங்கி, அவை கெட்டிப்பட்டு அல்லது வறண்டு போவதினால் பல தொந்தரவுகளும் நோய்களும் உருவாகிறது. அதுமட்டுமா, இந்த கழிவுகளை உடலில் இருந்து அகற்ற உடல் சில நுண்ணுயிர்களை உருவாக்குகிறது. அதாவது கழிவுகளை அழிக்க உருவாகும் இந்த நுண்ணுயிர்கள் உடலுக்கு தீமை செய்யும் நுண்ணுயிர் களாகவும் உள்ளது.

இவை உடல், உறுப்புகள் மற்றும் இரத்தத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இவற்றுடன் கழிவுகளும் உடலில் தேங்குவதினால் உடல் உஷ்ணமும் அதிகரிக்கிறது.

காலம் செல்லச் செல்ல கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற கணக்கின் படி கழிவிலிருந்து உடல் உஷ்ணம் அதிகரித்ததா? அல்லது உடல் வெப்பத்தால் கழிவுகள் தேங்கியதா? என்ற நிலைக்கு உடல் தள்ளப்படுகிறது.

இந்த நேரத்தில் நோயும் எளிதாக உடலில் உருவாகி ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவி நிலைக்கத் தொடங்கியிருக்கும்.

food and disease, can food cure disease, can food cure auto immune disease

இரத்த ஓட்டமும் கழிவுகள் தேங்கிய இடத்தில் தடைபட அதுவே நோய் முற்றிய நிலைக்கு தள்ளப் படுவதாகும். 

இவ்வாறு நோய் முற்றிப்போன நிலையில் நம்மை எவ்வாறு சீரான உணவின் மூலம் அதாவது சாதாரண உணவின் மூலம் ஆரோக்கியத்தை மீட்டேடுப்பது என்றும், நாமே நம் நோயை குணப்படுத்தி கொள்வது என்றும் இனிப் பார்ப்போம்.

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடல் என்றும் சீரான தட்ப வெப்ப நிலையைக் கொண்டிருக்க வேண்டும்.

அதிக குளிர்ச்சி, அதிக வெப்பம் உடலுக்கு நல்லதல்ல.

தேவைக்கு அதிகமான தூக்கம், தேவைக்கு குறைவான தூக்கம் என்றுமே உடலுக்கு ஆபத்தையும் கழிவு தேக்கத்தையும் அளிக்கும்.

தேவையான தூக்கம், உடல் இயக்கம் கழிவை வெளியேற்றும்.

காலை வெறும் வயிற்றில் மண் பானை தண்ணீர் அருந்துவதும், இரசாயனங்கள் இல்லாத திட, திரவ உணவை உட்கொள்வதனால் மேலும் மேலும் கழிவுகள் சேராது. பலகாலம் தேங்கி இருக்கும் கழிவுகளும் வெளியேற தொடங்கும்.

யோகா, சூரிய நமஸ்காரம் செய்வது அவசியம்.

கழிவுகள் தேங்கியுள்ள இடங்களுக்கு அசைவுகள் கொடுப்பதினால் தடைப்பட்ட இரத்த ஓட்டம் மெல்ல மெல்ல சீராகும். கழிவுகளும் வெளியேறும்.

காலைக் கதிரவனின் கதிர்களில் இருந்து வெளிப்படும் அபரிவிதமான ஆற்றல் உடலில் உள்ள தீமை செய்யும் நுண்ணுயிர்களை அழிக்கும். அதுமட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான பல நுண்ணூட்ட சத்துகளையும் அளிக்கிறது.

வாரம் ஒரு முறை எண்ணெய் குளியலும், எளிதாக ஜீரணிக்கக்கூடிய நஞ்சில்ல நாட்டு இளநீர், பழங்கள், புத்தம் புது காய்கறிகள், கீரைகள், நார்ச்சத்துள்ள உணவுகள் உடல் கழிவை அகற்ற உதவும். 

இவற்றை தவறாமல் பின்பற்ற ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்ற முறையான உணவே போதுமானது. இதைத்தவிர எந்த மருத்துவமும் அவசியமற்றதே.

மருத்துவத்திற்கும் வைத்தியருக்கும் செய்யும் செலவை அகற்றி என்றும் நம்முடன் மருத்துவராகவும், மருந்தாகவும் இருக்கும் காலை சூரியனையும், இரசாயனங்கள் இல்லாது எளிதில் ஜீரணிக்கும் இயற்கையின் கொடையான பழங்களையும் உட்கொள்ள நோயிலிருந்து எளிதாக வெளிவர முடியும்.

(9 votes)

2 thoughts on “உணவு எவ்வாறு நோயினை சரி செய்கிறது?

  1. காசிம்

    நன்றி அட்மின். மருத்தவம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் இந்த கலியூகத்தில் உங்களை போல நல்லவர்கள் கிடைப்பது அரிது

Comments are closed.