coconut, coconut benefits, thengai payanpgal, ilaneer, tender coconut, health n organics tamil, thennai maram, coconut tree benefits

தேங்காயின் மருத்துவ குணங்கள்

அன்றாடம் பயன்படுத்தும் ஒரு உண்ணத உணவு தேங்காய். இறைவனுக்கு படைக்கப்படும் மிக முக்கிய மூன்று பொருட்களில் தேங்காயும் ஒன்று. காரணம் மனதையும், உடலையும் பேணிக்காக்கும் சிறந்த உணவுப்பொருள் என்பதால். சத்துக்கள் மருத்துவகுணங்கள் என எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்டது தேங்காய். இன்று பலரும் பயப்படும் ஒரு பொருளாகவும் மாறியுள்ளது இது, அதற்கு காரணத்தை இந்த பகுதியின் இறுதியில் பார்க்கலாம்.

தேங்காய் சத்துக்கள்

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. குறிப்பாக கொப்பரை தேங்காய் ஆண்மையைப் பெருக்கும்.

தென்னையின் சில நன்மைகள்/பயன்கள்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கிற்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.

coconut, coconut benefits, thengai payanpgal, ilaneer, tender coconut, health n organics tamil, thennai maram, coconut tree benefits

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங் குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

Coconut Benefits uses

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தன் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

coconut

தேங்காய்ப் பால்

தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் ஈ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

தேங்காய்ப் பூ

குழந்தை சிவப்பு நிறமாக குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

தேங்காய் நல்லதா?

இவ்வளவு பயன்களையும் பார்த்தும் நமக்கு இன்னும் குழப்பம் அதிகரித்திருக்கும்.. தேங்காய் நல்லதா? அல்லது கெட்டதா? உடல் கொழுப்பு, பருமன், இருதயநோய் உள்ளவர்களுக்கும் வேறு சில நோய்களுக்கும் தேங்காய்யை தவிர்க்க சொல்கிறார்களே என்ற குழப்பமும் அதிகமாகும். சரி, தேங்காய் நல்லதா? என்றால் நூறு சதவீதம் சிறந்த-மிக சிறந்த உணவு தேங்காய். இது ஒரு துணை உணவு கிடையாது, முழு உணவு. அவ்வளவு சத்துக்கள் அதுவும் சமச்சீர் சத்துக்களை கொண்ட சிறந்த உணவு.

ஆனால் இந்த தேங்காயின் முழு பயனை மட்டும் பெற வேண்டுமானால் இதனை அப்படியே உண்ண வேண்டும். சமைக்காமல, அடுப்பில் ஏற்றாமல் புது தேங்காயை பச்சையாக உண்பதால் நல்ல கொழுப்பையும் மற்ற சத்துக்களையும் நாம் முழுவதுமாக பெறமுடியும். அடுப்பில் ஏற்றி சமைக்கும் பொழுது தேங்காயின் சத்துக்கள் உருமாறி தீமை செய்யும் சத்துக்களாக மாறிவிடுகிறது. அதேப்போல் அதிக குளிரில் அதாவது குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்துவதாலும் இடன் சத்துக்கள் உருமாறி தீமைசெய்யும் தன்மையைப் பெறுகிறது. செயற்கை குளிர், செயற்கை வெப்பம் இவை இரண்டுமே தேங்காயின் எதிரிகள்.

(12 votes)