சீரகம் – பயன்களும் மருத்துவகுணமும்

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அஞ்சறைப் பெட்டியில் அவசியம் இடம் பிடிக்கும் ஒரு பொருள் சீரகம். அனைத்து விதமான உணவுகளிலும் ஏதேனும் ஒரு வகையில் இதனை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம். கூட்டு, பொரியல், குழம்பு, மோர் என எல்லா உணவுகளிலும் சீரகம் சேர்க்கப்படுகிறது. சீரகம் உணவில் மணத்திற்காக மட்டும் சேர்க்கப்படுவது இல்லை. உடலை அதாவது தேகத்தை சீராக்கும்/ சமநிலையில் வைத்திருக்க உதவும் பொருள். சீர்+அகம் = சீரகம்.

இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட நோய்களைத் தடுக்க ஆற்றல் இந்த சீரகத்திற்கு உண்டு. நற்சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், பிலப்பு சீரகம், நட்சத்திர சீரகம், செஞ்சீரகம் என ஏழு வகை சீரகம் உண்டு. இவற்றில் உணவில் பயன்படுத்துவது பெருஞ்சீரகமும், நற்சீரகமும் ( பொதுவாக சீரகம் என்போம்).

சீரகத்தின் முக்கிய மருத்துவ பயன்கள்

  • வாய் நாற்றம் நீங்கும்
  • வாய்ப்புண் குறையும்
  • நாக்குத் தடிப்பு நீங்கும்
  • வாய் ஊறல் தணியும்
  • இருமல் குறையும்
  • உடல் பருமன் குறைய
  • தொண்டைக்கட்டு நீங்கும்

  • மலக்கட்டு நீங்கும்
  • மார்பு வலி குறையும்
  • மூச்சுத் திணறல் நீங்கும்
  • சீரணம் ஒழுங்காகும்
  • வயிற்று வலி நீங்கும்
  • சூதக வலி நீங்கும்
  • கூந்தல் உதிர்வை தடுக்க
  • சீதபேதி குணமாகும்

  • பல் வலி குறையும்
  • எலும்பு பலம் அடையும்
  • உடல் வறட்சியைப் போக்கும்
  • வியர்வை நாற்றம் நீங்கும்
  • வாந்தி, குமட்டல் நீங்கும்
  • நீர் எரிவு நீங்கும், பித்த மயக்கம், காய்ச்சல் தணியும்.

உடலை சமநிலையில் வைக்கவும் சிறிநீர் எரிச்சலுக்கும், குளிர்ச்சிக்கும் அவ்வப்பொழுது சீரக நீர அருந்தலாம். அன்றாடம் பயன்படுத்தும் சீரக நீர் தயாரிக்கும் முறையைப் பார்போம்.

சீரக நீர்

முதலில் 5 லிட் நீரைக் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த நீரை வடிகட்டி அதில் 50 கிராம் சீரகத்தைப் போட்டு மீண்டும் கொதிக்க வைத்து இறக்கவும். இந்த நிரையே குடிநீராக பயன்படுத்தினால், மேற்கண்ட பலன்களில் பலவற்றைப் பெறலாம். சிறப்பாக மூத்திர எரிச்சல், சீரணமின்மை இவற்றிற்கு இது சிறந்த குணம் அளிக்கும்.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி, மாந்தம், காரணம் தெரியாத அழுகைக்கும் சீரகத்தை சிறிது வாட்டி நீரூற்றி கசயமாக சற்று சுண்டவிட்டு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்று வலி தீரும்.

சீரகத்தில் உள்ள சத்தின் விகிதம் (100 கிராம்)

புரதம் 18.7கி
கொழுப்பு 15.0கி
தாது உப்புகள் 5.8கி
கார்போஹைட்ரேட் 36.6கி
சுண்ணாம்பு 511மி.கி
இரும்பு 310 மி.கி
கரோடின் 522 மி.கி.
நையசின் 2.6 மி.கி
வைட்டமின் சி 3மி.கி.

(1 vote)