tamil proverbs palamozhi

உணவு / ஆரோக்கிய பழமொழிகள் – 1

  • சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை.
  • உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
  • கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி.
  • சுத்தம் சோறு போடும்.
  • லங்கணம் பரம ஔஷதம் (பட்டினி கிடப்பது மகத்தான மருந்து).
  • பாலுக்கு மிஞ்சின சுவையுமில்லை, பல்லக்குக்கு மிஞ்சின சொகுசுமில்லை.
Food Health Tamil Proverb
  • வாழ்வதற்காக உண்; உண்பதற்காக வாழாதே.
  • விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
  • உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
  • கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே.
  • வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
  • வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்.

  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.
  • பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.
  • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
  • முழு பூசணியைச் சோற்றில் மறைக்காதே.

  • மருந்தேயாயினும் விருந்தோடு உண்.
  • சுட்ட எண்ணையைத் தொடாதே, வறுத்த பருப்பை விடாதே!.
  • வெட்டிவேரில் விசிறியும் விலாமிச்சை வேரில் தட்டியும் பண்ணு.
  • வெந்தயம் போடாத கறியும் கறியல்ல, சந்தையில்லாத ஊரும் ஊரல்ல.
  • வில்வப் பழம் திண்பார் பித்தம் போக, பனம் பழம் திண்பார் பசி போக.

  • பொன்னாங் கண்ணிக்கு புளியிட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்.
  • சுக்கு அறியாத கஷாயம் உண்டா?.
  • வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
  • பருப்பில்லாத கல்யாணம் உண்டா?.

  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • பலா உத்தமம், மா மத்திமம், பாதிரி அதமம்.
  • உடம்பைக் கடம்பாலே அடி.
  • கத்தரிக்காய்க்கு காம்பு ருசி, வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.