இட்லி நல்லதா?

பக்குவத்தில் கிடைத்த இட்லி எவ்வளவு நல்லதோ அதைவிட பல மடங்கு தீமையைக் கொண்டது அதிகம் புளித்த மாவில் இட்ட இட்லி அல்லது தோசை. பக்குவமான மாவில் உள்ள உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரைப் போல் அதிகம் புளித்த மாவில் உடலுக்கு தீமை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகுகிறது.

இந்த மாவில் செய்த இட்லி, தோசை உட்கொள்வதால் வயிறு உப்புசம், சோம்பல், சோம்பேறித்தனம், தலை சுற்றல், ஜீரணமின்மை, அதிக தூக்கம், அதிகாலை உறக்கம், உடல் பருமன், பல் வலி, மலச்சிக்கல் என நோய்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். 

பல வீடுகளில் வாரம் ஒருமுறை இட்லி மாவு அரைத்தும், தயிர் உறையவைத்தும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதை நாகரிகம் என்று கருதுகின்றனர்.

அதிகம் புளித்த, பக்குவம் தவறிய உணவு என்பது குப்பைக்கு சமானம். குளிர் சாதனப் பெட்டியில் புளிக்காத மாவை வைத்து ஒருவாரம் பத்து நாட்களில் புளிக்க விடுவது அதைவிட கெடுதல். கடைகளில் மாவு புளிக்காமல் இருக்க பல இரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.

இவை அனைத்தின் மூலம் இட்லி மாவு என்பது சத்தற்ற நஞ்சாக மாறுகிறது. இந்த நஞ்சான குப்பை மாவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து அன்றாடம் தோசை அல்லது மற்ற மாவு கலந்து (ரவை, அரிசி மாவு) தோசை ஊற்றி காலை மாலை நேரங்களில் உண்பதினால் பல வியாதிகள் வந்து சேரும் என்பது நிதர்சனம்.

உடல் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து இவ்வாறான உணவை உண்டு வர காலப்போக்கில் தைராய்டு, ரத்தக் கொதிப்பு, மூட்டு தேய்மானம், இருதயம் சம்மந்தமான நோய்கள் போன்றவை அதி விரைவில் வர வாய்ப்புகள் அதிகம்.