honey-rich-in-iron

இரும்புச் சத்து மிகுந்த உணவுகள்

தேன்

தேன் இரும்பு சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புத உணவு. இரும்பு சத்துடன் தேனில் உடலுக்கு அவசியமான பிற தாது சத்துக்களும் நிறைந்துள்ளது. இரத்த சோகை, நோய் எதிர்ப்பு திறன் அதிகம் கொண்டது. உள்ளங்கையில் காலையில் ஒரு ஸ்பூன் தேனை நாக்கால் நக்கி உட்கொள்ளலாம் அல்லது ஆப்பிள் வாழைப்பழத்துடனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

honey-rich-in-iron

பாதாம் பருப்பு

புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்களுடன் இரும்பு சத்துக்களும் பாதாம் பருப்பில் உள்ளது. இரவு சிறிது நீரில் நான்கைந்து பாதாம் பருப்பை ஊறவைத்து காலையில் தோலுரித்து உட்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

badam-iron-rich-food

வாழைப்பழம்

அனைத்து இடத்திலும் கிடைக்கும் சிறந்த பழம் வாழைப்பழம். நாட்டு வாழை ரகங்களில் அதிக இரும்பு சத்துக்களும் பிற சத்துக்களும் உள்ளது. நாளொன்றிற்கு தவறாமல் ஒரு வாழைப்பழம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Banana-iron-rich-food

பேரிச்சம்பழம்

இரும்பு சத்துக்கு பெயர்போனது பேரிச்சை. நாளொன்றுக்கு இரண்டு பேரிசை எடுத்துக்கொள்ள இரத்த சோகை வரவே வராது.

dates-iron-rich

திராட்சைப்பழம் (உலர்ந்ததும்)

சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும், இரத்த அணுக்கள் ஓட்டத்திற்கும் உறுதுணையாக இருக்க பல சத்துக்களையும் இரும்பு சத்து கொண்ட பழம் திராட்சை. ஒரு கையளவு திராட்சையை அன்றாடம் எடுத்துக் கொள்ள சிறந்த பலனைப் பெறலாம். உலர் திராட்சை (கிஸ்மிஸ்) பழத்தையும் எடுத்துக் கொள்ளலாம். பத்து உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து காலையில் எடுத்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

dry-grapes-iron-rich-food

வெந்தயம் / வெந்தயக்கீரை

சுண்ணாம்பு சத்துக்களுடன் இரும்பு சத்துக்களையும் அதிக அளவில் கொண்டது வெந்தயமும் வெந்தயக்கீரையும். கிடைக்கும் காலத்தில் வாரம் ஒருமுறை வெந்தயக்கீரையை எடுத்துக்கொள்ளலாம். வெந்தயத்தை இரவு நீரில் ஊறவைத்து காலையில் எடுத்துக் கொள்ளலாம்.

fenugeek-iron-rich-food

சின்ன வெங்காயம்

இரும்பு சத்துக்களை உடல் உட்கிரகிக்க தேவைப்படும் சத்துக்களில் பலவற்றைக் கொண்டது சின்ன வெங்காயம். மேலும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெற்றது. தவறாமல் நமது உணவில் சின்ன வெங்காயம் எடுத்துவர இரத்த சோகை என்ற பாதிப்பு ஏற்படாது.

onion-iron-rich-food

சுண்டைக்காய்

தமிழகத்தில் பல வீடுகளிலும் இருக்கும் ஒரு செடி, காய் சுண்டைக்காய். இதனை குழம்பாக, பச்சடியாக அல்லது வற்றல் செய்து உண்ண உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் கிடைக்கும்.

sundakkai-iron-rich-food

நெல்லிக்காய்

காய், கனிகளில் சிறந்தது நெல்லிக்காய். உடல் ஆரோக்கியத்திற்கும், இளமையாக, சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும் கனி நெல்லிக்கனி. இரும்பு சத்துக்கள் மட்டுமல்லாமல் பல அபூர்வ சத்துக்களையும் கொண்டது.

amla-iron-rich-food

மிதிபாகல்

வைட்டமின், தாது சத்துக்கள் மட்டுமல்லாமல் இரும்பு சத்தும் பிற சத்துக்களும் கொண்டது மிதிபாகல். தமிழகத்தில் கிராமப்புறங்களில் சாதாரணமாக கிடைக்கும் காய்.

midi-pagal-iron-rich-food

முருங்கைக்காய்

தமிழகத்தில் அதிக வீடுகளில் இருக்கும் மரம் முருங்கை மரம். இதனை நெல்லிக்கனிக்கு அடுத்தபடியாக சர்வரோக நிவாரணி என்றால் அது மிகையாகாது. முருங்கையின் இலை, பூ, பிசின், காய் என அனைத்துமே சிறந்த சத்துக்களை குறிப்பாக இரும்பு சத்துக்கள் கொண்டது.

moringa iron rich food

கொத்தவரங்காய்

பலருக்கும் பிடிக்காத காய் கொத்தவரை, ஆனால் சத்துக்கள் அதிலும் குறிப்பாக இரும்பு சத்துக்கள் அதிகம் கொண்டது. வீட்டு தோட்டத்தில் மிக எளிதாக வளர்ந்து அதிக பயன் கொடுக்கக் கூடியது.

மேலும்  

மாங்காய், தக்காளி, பீட்ரூட், மாதுளை, ஆப்பிள், கேரட், பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவையும் இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுகள்.

(4 votes)