கூம்பாளை அரிசி – நமது பாரம்பரிய அரிசி

கூம்பாலை, கூம்வாலை, கூம்பாளை என பல பெயர்களில் அழைக்கப்படும் ஒரு நெல் ரகம் தான் இந்த கூம்பாலை அரிசி. இது நம் தமிழகத்தின் பாரம்பரிய அரிசி ரகத்தை சேர்ந்தது. சுவையும் சத்தும் நிறைந்த சிகப்பரிசி ரகத்தை சேர்ந்தது கூம்பாளை. பல மருத்துவகுணங்களைக் கொண்ட அரிசி. காவிரி கரையில் விளையும் ஒரு அற்புதமான நெல் ரகம் இது.

ஐம்பது வருடங்களுக்கு முன் நம் முன்னோர்கள் இந்த நெல்லை ஊறவைத்து கையால் ஆட்டுக்கல்லில் அரைத்து பிழிந்து பாலெடுத்து அந்த பாலில் சுவைக்காக சிறிது தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தினமும் காலையில் பருகுவதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும், உடலில் ஏற்படும் அசதி, உடல் வலி தீரும்.

கர்பிணிகள் இந்த கூம்பாளை அரிசியில் சாதம் செய்து உண்பதால் எளிதாக சுகப்பிரசவம் சாத்தியப்படும். பிரசவ வலி மறைந்தே போகும். ஆறுமாதங்கள் விளையும் நெல் ரகம் என்பதால் அதற்கேற்ற சத்துக்கள் இருக்கத்தானே செய்யும்.

மானவரியில் கூட விளையும் இந்த கூம்பாளை நெல் பெரிய அரிசியைக் கொண்டது. கூம்பாளை அரிசியை சாதமாக வடித்து உண்ண நல்ல சுவையாக இருக்கும். பெரிய அரிசியாக இருக்கும் கூம்பாளை அரிசியைக் கொண்டு இட்லி, தோசை போன்ற பலகரங்களுக்கும் சிறந்ததாக இருக்கும்.

(1 vote)