கல்லீரல் நோய்கள் தீர

உடல் உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு கல்லீரல். உடல் இயக்கம், இரத்த ஓட்டம், நச்சு நீக்கம் என பல வகைகளில் கல்லீரல் இயங்குகிறது. ராஜ உறுப்பு என்றும் கல்லீரலை நாம் குறிப்பிடுவதுண்டு, அந்தளவு உடல் இயக்கத்திற்கு இன்றியமையாத பெரிய உறுப்பும் கல்லீரல் தான். அப்பேர்ப்பட்ட கல்லீரலில் ஏதேனும் நோய்கள் ஏற்பட அவற்றிலிருந்து மூலிகைகளைக் கொண்டு எளிதாக வெளிவர சில வழிமுறைகளைப் பார்க்கலாம்.

காமாலை, கல்லீரல் வீக்கம், கல்லீரல் தொற்று, நச்சுக்கள் சேர்ந்த கல்லீரல், வலி, போன்ற நோய்கள் ஏற்படுவதுண்டு. பல விதமான கல்லீரல் நோய்களுக்கும் எளிதாக கிடைக்கும் கீழா நெல்லி, கரிசாலை மூலிகை சிறந்த பலனைக் கொடுக்கும். கொய்யாப்பழம் கல்லீரல் பலப்படுத்தும் சிறந்த பழம்.

கீழாநெல்லி, கரிசாலை, வேப்பிலை, துளசி சேர்த்து வெறும் வயிற்றில் மென்று தின்று வர கல்லீரல் நோய்கள் அனைத்திற்கும் நல்ல பலன் விரைவில் கிடைக்கும். கல்லீரல் பலப்படும். வேப்பம்பூ கல்லீரலின் சீரான இயக்கத்திற்கு சிறந்த பலனை அளிக்கும்.

கல்லீரல் வீக்கம் குறைய

  • கரிசிலாங்கண்ணி பொடி, மருதம்பட்டை பொடி ஆகியவற்றை ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொண்டு தேனில் குழைத்து அன்றாடம் எடுத்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும். கல்லீரல் வீக்கம் குறையும்.
  • நொச்சியிலைச் சாறு எடுக்க நல்ல் பலன் கிடைக்கும்.
  • சீந்தில் கொடி நல்ல மருந்தாகும்.

நஞ்சான கல்லீரலுக்கு

தொடர்ந்து கரிசலாங்கண்ணி கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துவர கல்லீரல் பழைய நிலைக்கு திரும்பும்.

கல்லீரல் வலிக்கு

கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் உண்டுவர கல்லீரல் வலி நீங்கும்.

(1 vote)