பனிவரகு நாட்டுக்காய்கறி சூப்

என்றும் இளமையுடன் இருக்க சிறந்த உணவாக இருக்கக்கூடியது பனிவரகு சிறுதானியம். முடி உதிர்வை தடுத்து கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான பல பல சத்துக்கள் கொண்டா தானியம் நம் பனிவரகு தானியம்.

Panivaragu-Millet-Proso-Millet in Tamil, Millet

புரதம் மட்டுமல்லாது, வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாது உப்புகள், துத்தநாகம் (Zinc),  நார்சத்து என அனைத்தையும் சீராக கொண்டுள்ளது பேனிகம் மிலியேசியம் என்ற நம் பனிவரகு. இதில் உள்ள புரதம் கிட்டத்தட்ட 10 முக்கிய அமினோ அமிலங்களின் சேர்க்கையாக இருக்கிறது.

மேலும் பனிவரகின் நன்மைகள், பயன்கள் மற்றும் மருத்துவகுணங்கள் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும் – பனிவரகு.

மற்ற சிறுதானியங்களை பற்றி தெரிந்துக்கொள்ள – சிறுதானியங்கள்.

பெரியவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற சூப். குழந்தைகளும் விரும்பி உண்ணும் காய்கறி சூப்.

தேவையான பொருட்கள்

  • 1 ஸ்பூன் பனிவரகு அரிசி
  • ¼ கப் நாட்டுக்காய்கறிகள் (அவரைக்காய், முள்ளங்கி, பச்சை மொச்சை, வெள்ளைப்பூசணி, கத்தரிக்காய், பீர்க்கங்காய், பரங்கிக்காய் கலவை)
  • 1 சிட்டிகை கரம் மசாலாத்தூள்
  • ¼ ஸ்பூன் சிட்டிகை
  • 1 வெங்காயம்

  • 1 தக்காளி
  • சிறிது புதினா
  • சிறிது கொத்தமல்லி
  • 3 ஸ்பூன்   பசு நெய்
  • உப்பு
  • தேவையான அளவு மிளகு சீரகத்தூள்

செய்முறை

ஒரு மண்சட்டியில் சிறிது பசுநெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கி கரம்மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும். 

பின்பு சிறிதாக நறுக்கிய நாட்டு காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் 20 நிமிடம் ஊறவைத்த பனிவரகு அரிசியை போட்டு நன்றாக வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும்.

நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை சிறுதீயில் 20 நிமிடம் மூடிவைக்கவும்.

காய்கறிகள் நன்கு வெந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். 

சுவைகேற்றவாறு மிளகு சீரகத்தூள் சேர்த்து பருகலாம்.

பனிவரகு நாட்டுக்காய்கறி சூப்

புரதம் மட்டுமல்லாது, வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாது உப்புகள், துத்தநாகம் (Zinc),  நார்சத்து என அனைத்தையும் சீராக கொண்டுள்ளது பேனிகம் மிலியேசியம் என்ற நம் பனிவரகு.
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 40 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • 1 ஸ்பூன் பனிவரகு அரிசி
  • ¼ கப் நாட்டுக்காய்கறிகள் (அவரைக்காய், முள்ளங்கி, பச்சை மொச்சை, வெள்ளைப்பூசணி, கத்தரிக்காய், பீர்க்கங்காய், பரங்கிக்காய் கலவை)
  • 1 சிட்டிகை கரம் மசாலாத்தூள்
  • ¼ ஸ்பூன் சிட்டிகை
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • சிறிது புதினா
  • சிறிது கொத்தமல்லி
  • 3 ஸ்பூன்   பசு நெய்
  • உப்பு
  • தேவையான அளவு மிளகு சீரகத்தூள்

செய்முறை

  • ஒரு மண்சட்டியில் சிறிது பசுநெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கி கரம்மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும். 
  • பின்பு சிறிதாக நறுக்கிய நாட்டு காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
  • இத்துடன் 20 நிமிடம் ஊறவைத்த பனிவரகு அரிசியை போட்டு நன்றாக வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
  • நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை சிறுதீயில் 20 நிமிடம் மூடிவைக்கவும்.
  • காய்கறிகள் நன்கு வெந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். 
  • சுவைகேற்றவாறு மிளகு சீரகத்தூள் சேர்த்து பருகலாம்.