உப்பு – மருத்துவமும் பயன்களும்

உப்பில்லாத சமையல் உணவே இல்லை எனலாம். எந்த ஒரு உணவை அடுப்பிலிட்டு சமைத்தாலும் அதில் இயற்கையாக இருக்கும் உப்பு சத்துக்கள் மறையும். அதனால் நாம் செயற்கையாக உப்பினை சேர்க்கிறோம். அவ்வாறு சேர்க்கப்படும் உப்பு உடலுக்கும், நமது ஜீரண உறுப்புக்கும் அவசியமாகிறது.

உப்பு, உணவில் மட்டுமல்லாமல் நமக்கு பல விதங்களிலும் மருந்தாகவும் பயன்படுகிறது. அவற்றை இனி பார்ப்போம். உணவாக மட்டுமல்லாமல் வேறு எதற்கெல்லாம் உப்பு நமக்கு பயன்படும் என தெரிந்தால் அன்றாடம் பயன்படுத்த உதவும். உப்பு என்பது கடலில் இருந்து பெறப்படும் கல் உப்பை குறிக்கும்.

வழுக்கையில் முடி வளர

வழுக்கை, சொட்டை தலையில் மயிர் முளைக்க உப்பும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. உப்பை நன்றாக தூள் செய்து தினசரி 3 அல்லது 4 வேளை தேய்த்து வர மயிர் முளைக்கும்.

முள் குத்திய வலி குறைய

உப்பையும் மிளகையும் ஒரே எடை எடுத்து நல்லெண்ணெயில் வதக்கி முள் குத்திய இடத்தில் ஒத்தடம் தர இதம் தெரியும், வலி குறையும்.

நகச்சுற்று மறைய

உப்பு, வெங்காயம், சுடுசோறு இம்மூன்றையும் சம அளவு அரைத்து நகச் சுற்றில் கட்டிவிட வேண்டும். விரைவில் நகச்சுற்று மறையும்.

காதில் பூச்சி நுழைந்து விட்டால்

காதில் எறும்பு அல்லது சிறு பூச்சி நுழைந்து விட்டால் கொஞ்சம் உப்பை நீரில் கரைத்து காதில் விட, சில நிமிடத்தில் எந்த பூச்சியும் வெளியேறும்.

விஷக்கடிகளுக்கு

குளவி, சிலந்தி போன்ற விஷப்பூச்சிகள் கொட்டினால், கடித்தால் உடனே உப்பைக் சிறிது நீரில் கெட்டியாகக் கரைத்து கடிவாயில் தடவினால் விரைவில் நிவாரணம் தெரியும். மேலும் சர்க்கரை தண்ணீரில் சில துளி உப்புத் தண்ணீர் விட்டு உள்ளுக்குக் கொடுப்பதும் நல்லது.

அரிசி வண்டு பிடிக்காமல் இருக்க

அரிசி வண்டு பிடிக்காமல் இருக்க / How do you control pests in rice?

அரிசியைச் சேமிக்கும் போது சிறிது உப்புத் தூளை கலந்து விட்டால் எத்தனை நாளாயினும் அது கெடாமல் புழு பூச்சி வராமல் பாதுகாப்பாக இருக்கும்.

உப்பின் பிற பயன்கள்

  • நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பைப் போட்டுச் சுடவைத்தால் நெய் நீண்ட நாள் இருக்கும்.
  • மண்ணெண்ணெயில் சிறிது உப்பு கலந்து விளக்கேற்றினால் மண்ணெண்ணெய் சீக்கிரம் தீராது.
  • சாமான்கள் மீது துரு பிடித்திருந்தால் அதன் மீது உப்பைத் தேயுங்கள். துரு அகன்று பளபளப்புத் தோன்றும்.
  • தரை கழுவும் நீரில் உப்பு கலந்து கழுவினால் தரை காய்ந்த பிறகு ஈக்கள் தரையில் மொய்க்கும் தொல்லையிராது.
  • பற்களில் ஏற்படும் கறையை நீக்க உப்பு பயன்படும்.
(35 votes)