சாமை வெண் பொங்கல்

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.

இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம். இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று. 

samai rice, samai arisi, millet in tamil, samai benefits in tamil, samai health benefits and medicinal uses, little millet

மேலும் சாமை அரிசியின் பயன்கள் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – சாமை அரிசி. மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் சாமை அரிசி
  • ¼ கப் ப.பருப்பு
  • ½ ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • சிறிது இஞ்சி
  • தேவையான அளவு உப்பு
  • 2-4 ஸ்பூன் பசு நெய்
  • சிறிது பெருங்காயம்
  • சிறிது கருவேப்பிலை   

செய்முறை

  • சாமை அரிசி மற்றும் ப.பருப்பை தனித்தனியாக இருபது நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மண்சட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாசிப்பருப்பை ஐந்து நிமிடம் வேகவிடவும்.
  • பின் அதனுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து சாமை அரிசியையும் வேகவிடவும்.
  • நன்கு கொதி வந்தவுடன் அடுப்பை சிறுதீயில் வைத்து வேகவிடவும்.
  • பத்து பதினைத்து நிமிடத்தில் நன்கு வெந்து தயாராகும்.
  • பின் ஒரு வாணலியில் நெய் விட்டு மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி தாளித்து கடைசியில் பெருங்காயப்பொடி, கருவேப்பிலை சேர்த்து பொங்கலில் கொட்டி உப்பு சேர்த்து கிளறவும்.
  • சுவையான சாமை வெண் பொங்கல் தயார்,

சாமை வெண் பொங்கல்

சர்க்கரை நோயளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா கருதப்படுகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.
இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம். இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது.
இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று. 
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 40 minutes