வேப்பம் பூ ரசம் / Neem Flower Rasam

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பூ இந்த வேப்பம்பூ. வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ மிகுந்த நன்மை அளிக்கக் கூடியது. இந்த ரசம் பித்தத்தை போக்கக்கூடியது, வாரம் ஒரு முறை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப்பூச்சி நீங்கும். For English Neem Flower Rasam Recipe.

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி அளவு காய்ந்த வேப்பம் பூ
  • 1 நாட்டு தக்காளி
  • புளிக்கரைசல்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்
  • சிறிது மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகு சீரக பொடி
  • சிறிதளவு பெருங்காயத்தூள்
  • 1 ஸ்பூன் பசு நெய்
  • உப்பு
  • கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் வேப்பம்பூவை சிறிதளவு பசு நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியில் பசு நெய் விட்டு. கடுகு, சீரகம் சேர்த்து காய்ந்ததும் வர மிளகாய், கருவேப்பிலை தாளித்து, புளியை கரைத்து அதில் தக்காளி பிழிந்து விட்டு, மஞ்சள் தூள், மிளகு சீரக பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

  • சிறிது கொதித்ததும் வறுத்த வேப்பம்பூ சேர்த்து சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • கடைசியாக கொத்தமல்லி சேர்க்கவும்.
  • சத்துக்கள் நிரந்த நமது பாரம்பரிய ரசம் தயார். சூடான சத்தத்துடன் உட்கொள்ள சிறந்த பலனை பெறலாம்.

வேப்பம் பூ ரசம்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பூ இந்த வேப்பம்பூ. வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது.
கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ மிகுந்த நன்மை அளிக்கக் கூடியது. இந்த ரசம் பித்தத்தை போக்கக்கூடியது, வாரம் ஒரு முறை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப்பூச்சி நீங்கும்.
ஆயத்த நேரம் : – 5 minutes
சமைக்கும் நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 10 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி அளவு காய்ந்த வேப்பம் பூ
  • 1 நாட்டு தக்காளி
  • புளிக்கரைசல்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்
  • சிறிது மஞ்சள் தூள்
  • சிறிதளவு பெருங்காயத்தூள்
  • 1 ஸ்பூன் பசு நெய்
  • உப்பு
  • கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் வேப்பம்பூவை சிறிதளவு பசு நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியில் பசு நெய் விட்டு. கடுகு, சீரகம் சேர்த்து காய்ந்ததும் வர மிளகாய், கருவேப்பிலை தாளித்து, புளியை கரைத்து அதில் தக்காளி பிழிந்து விட்டு, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • சிறிது கொதித்ததும் வறுத்த வேப்பம்பூ சேர்த்து சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • கடைசியாக கொத்தமல்லி சேர்க்கவும்.
  • சத்துக்கள் நிரந்த நமது பாரம்பரிய ரசம் தயார். சூடான சத்தத்துடன் உட்கொள்ள சிறந்த பலனை பெறலாம்.